Friday, May 3, 2013
Friday, April 12, 2013
வாசகர் கடிதம்- விகடன்( 17/04/2013) இதழ்
ராகுல் காந்தி பிரதமராக எந்த நேரத்திலும் ஆதரவு அளிப்பேன் என பிரதமர் சொல்லி இருப்பது போதும்டா சாமி ஆள விடுங்க என்பது போலவே இருக்கிறது.
மார்கண்டேய கட்ஜு கூறி வரும் கருத்துக்கள் அவர் இந்தியாவின் மனசாட்சி என முன்பு கூறியதை விட அவர் சர்சைகளையே பெரிதும் விரும்புகிறாரோ என்று தான் எண்ண தோன்றுகிறது.
பட்ட படிப்பு என்பதை இன்று வெறும் பணம் பண்ணும் வேலை என்பதாக மட்டும் கொள்ளும் " கல்விதந்தைகளும் " " அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை நாட்டையே விழுங்கி விடும் நச்சு களைகள் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
ஜெய்சங்கர் காலத்து வைரகடத்தல் கதைகளுக்கு இத்தனை பில்டப்பா என்று தான் எங்களுக்கும் கேட்க தோணியது " சேட்டை" பார்த்த பொழுது.
" உன் பாதையை நீயே உருவாக்கு. மத்தவங்க தான் அதில் வரணுமே தவிர நீ அடுத்தவங்க பாதையில போக கூடாது என்ற அப்பாவின் வார்த்தைகளை மகள் எப்படி காப்பற்றி இருக்கிறார் என்பதை பார்க்க " கோச்சடயனுக்காக" நாங்களும் காத்து இருக்கிறோம்.
உறவுகளும் அன்பான நண்பர்களும் தான் உண்மையான சொத்து என்று காலம் கடந்து உணர்ந்த வடிவேலுவின் மகள் திருமணம் சிறப்பாக நடந்தது போல திரைப்பட துறையிலும் அவரின் செகண்ட் இன்னிங்க்ஸ் சிறப்பாக இருக்கு வேண்டும் என்பது தான் எங்களின் ஆசையும்.
பாஸ்வேர்ட் முதல் வாரமே அருமையான உதாரணங்களுடன் பட்டையை கிளப்புகிறது.
அதிலும் அந்த நவீன ராமாயணம் சிரித்து சிரித்து வயிறு வலி வந்தது தான் மிச்சம்.
ரொம்ப நாள் கழித்து கட்டிட சுவர் நீள நாக்கு அரக்கனை நியாபகபடுத்தி விட்டது
" கேள்வி" சொல்வனம் கவிதை.
"மறக்கவே நினைக்கின்றேன்" மாரி செல்வராஜின் புதிய தொடர் இன்னும் ஆழமான வார்த்தை பிரயோகங்களை கொண்டு வந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
" ஒரு பொண்ண வேலைக்கு வச்சு நன்றி சொல்ல தெரியுது? வாங்கின கடன திருப்பி கொடுக்க தெரியலையா? தக்காளி! அப்பா சாமி இந்த செல் போன் இம்சைகளை புட்டு புட்டு வைத்தது.
" மச்சி ஒரு குவார்டர் சொல்லேன்" போன்ற கதாபாத்திரங்களை தான் ஜீவாவிடம் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று அவர் சொல்வது மிகவும் தவறு. கொஞ்ச நாள் கழித்து அது போன்ற படங்கள் அவர் வரலாற்றில் இருந்து தொலைந்து போய் விடும். " நீ தானே என் பொன் வசந்தம்" போன்ற படங்கள் தான் காலம் கடந்தும் போற்றப்படும்.
மனிதர்களுக்கு வகிக்கும் பதவிகளில் இருந்து வேண்டுமானால் ஒய்வு தருவார்கலேயன்றி அவர் ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து ஒய்வு எடுக்க முடியாது என "சந்துரு" அவர்களின் பதில் மற்ற வழக்கறிஞர்களும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
" கடவுள் நினைத்தான்" மணநாள் கொடுத்தான்" அதை மனிதன் தான் தன்னுடைய அச்சு பிச்சு தனங்களால் கெடுத்தான் என்பதை வயிற்றை பதம் பார்த்து சொன்னது கட்டுரை.
"ஒவொரு பழமும் ஒவொரு விதமாக உருளும் போல " போன்ற வர்ணனைகள் வண்ணதாசனுக்கு மட்டுமே சாத்தியமானது." கனியான பின்னும் நுனியில் பூ " நிஜமாகவே மனசை அள்ளி சென்றது என்றே சொல்லலாம்.
" அரசியலில் என் பயனுக்கு துளி கூட இஷ்டம் இல்லை " என்ற ஸ்டாலின் கூறிய அன்றைய வார்த்தைகளை மெய்யாக்கி இருக்கிறார் உதயநிதி
" யட்சன்" படபடப்பு விமானம் ஏறி பறந்து கொண்டு இருக்கிறது வாரவாரம் .
சமூகம் சார்ந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைகள் அவன் சார்ந்தவர்களாலேயே ஒரு உள்ளபிரள்வு நோயாக பார்க்க படுவதால் தான் நம் நாட்டு இளைய தலைமுறை மேற்கத்திய நாடுகளின் பின்னால் கை கட்டி சென்று கொண்டு இருக்கிறது என்பதை வருத்ததுடன் பதிவு செய்து உள்ளது " ஆறாம் திணை"
"இங்கே 25 வயசு வரைக்குமே தமிழ் படிக்காமலேயே காலம் தள்ளிரலாம் " என்ற இயக்குனர் சசியின் வார்த்தைகளை தமிழ் நாட்டு இளைய தலைமுறையின் காதுகளை எட்டவே எட்டாது என்பது தான் வலி மிகுந்த உண்மை.
ஒரு குட்டி அரசாங்கம் போல செயல்பட்டு தானே துயர் துடைத்த விகடனின் பணி கடலூர் மாவட்ட காற்றில் நீங்கா இசையாய் ஒலித்து கொண்டே இருக்கும்.
அடையாளம் வேண்டி அண்டை நாட்டு கதவை தட்டும் நம் இலங்கை தமிழர்கள் விரும்பவே விரும்பாத ஒரு வலி மிகுந்த அடையாளம் தான் அகதி என்பதை உணர்த்தியது " அருள் எழிலனின் " கட்டுரை.
" சாமி சோறு போடுது" ஹாசிப்
Thursday, February 28, 2013
விகடன் விமர்சனம் 27/01/2013
தலைவா...
உங்களுக்கு மட்டும் எங்க இருந்து பாஸ் பல்பு எரியுது . விஸ்வரூபம் படம் விமர்சனம் . அதே நேரத்துல பொக்கிஷம் படங்களும்
கமல்- எம் ஜி ஆர்
கமல் - கலைஞர்
கமல்- ஜெ ( அதுவும் இந்த போட்டோ இருக்கே!!! அடடே யாரோட தவம் கலஞ்சுதுன்னு எங்களுக்கு தானே தெரியும்)
கமல்- ரஜினி
கலக்கிடீங்க போங்க...
ஏன் பாஸ் மூணு லட்சமா வருமான உச்ச வரம்பு உயர போகுதுன்னு சொல்லி இருக்கீங்களே... அப்போ நான் எல்லாம் இந்த பிறவியில வரியே கட்ட மாட்டேனா ??? இல்ல விடவே மாட்டிங்களா ?? சத்தியமா நான் நல்லவன் பாஸ்... அதான் கேட்டேன்
டெல்டாவில் புதை நெல் .....அந்த கயிறு நம் தலைக்கு மேலயும் தான் சுற்றி கொண்டு இருக்கிறது.... விவசாயி கவனிக்கபடாமல் போகும் போது ... அந்த கயிறு நம் கழுத்தையும் இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை....ஹாசிப் கான் கார்டூன் மனதை கனபடுத்துகிறது
கமல் என்ற நடு நிலையான கலைஞனுக்கு சமூக பொறுப்பு உண்டல்லவா என கேட்டு இருக்கிறீர்கள்... அந்த சமூக பொறுப்பு தான் அந்த மாபெரும் கலைஞனுக்கு இந்த தமிழ் சமூகம் தீராத மன வருத்தம் தந்த போதும் மாறாத மௌனத்தையும்... வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை தான் என்பதையும் இந்த சமூகத்துக்கு உணர்த்தியது,,, இது கமல் மற்றும் அஹிம்சையின் விஸ்வரூபம் என சொன்னால மிகை ஒன்றும் இல்லை.
ஏன் பாஸ் குஷ்பூ என்ன வெறும் முன்னால் ஹீரோயினா ... முன்னால் மாஸ் ஹீரோயினா,,,, " பயம்ன்னா எனக்கு என்னன்னு தெரியாதுன்னு" சொல்லி இருக்காங்களே
Subscribe to:
Posts (Atom)
