தலைவா...
உங்களுக்கு மட்டும் எங்க இருந்து பாஸ் பல்பு எரியுது . விஸ்வரூபம் படம் விமர்சனம் . அதே நேரத்துல பொக்கிஷம் படங்களும்
கமல்- எம் ஜி ஆர்
கமல் - கலைஞர்
கமல்- ஜெ ( அதுவும் இந்த போட்டோ இருக்கே!!! அடடே யாரோட தவம் கலஞ்சுதுன்னு எங்களுக்கு தானே தெரியும்)
கமல்- ரஜினி
கலக்கிடீங்க போங்க...
ஏன் பாஸ் மூணு லட்சமா வருமான உச்ச வரம்பு உயர போகுதுன்னு சொல்லி இருக்கீங்களே... அப்போ நான் எல்லாம் இந்த பிறவியில வரியே கட்ட மாட்டேனா ??? இல்ல விடவே மாட்டிங்களா ?? சத்தியமா நான் நல்லவன் பாஸ்... அதான் கேட்டேன்
டெல்டாவில் புதை நெல் .....அந்த கயிறு நம் தலைக்கு மேலயும் தான் சுற்றி கொண்டு இருக்கிறது.... விவசாயி கவனிக்கபடாமல் போகும் போது ... அந்த கயிறு நம் கழுத்தையும் இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை....ஹாசிப் கான் கார்டூன் மனதை கனபடுத்துகிறது
கமல் என்ற நடு நிலையான கலைஞனுக்கு சமூக பொறுப்பு உண்டல்லவா என கேட்டு இருக்கிறீர்கள்... அந்த சமூக பொறுப்பு தான் அந்த மாபெரும் கலைஞனுக்கு இந்த தமிழ் சமூகம் தீராத மன வருத்தம் தந்த போதும் மாறாத மௌனத்தையும்... வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை தான் என்பதையும் இந்த சமூகத்துக்கு உணர்த்தியது,,, இது கமல் மற்றும் அஹிம்சையின் விஸ்வரூபம் என சொன்னால மிகை ஒன்றும் இல்லை.
ஏன் பாஸ் குஷ்பூ என்ன வெறும் முன்னால் ஹீரோயினா ... முன்னால் மாஸ் ஹீரோயினா,,,, " பயம்ன்னா எனக்கு என்னன்னு தெரியாதுன்னு" சொல்லி இருக்காங்களே
No comments:
Post a Comment