Sunday, December 23, 2012

நீ தானே என் பொன் வசந்தம்

அன்புள்ள கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு, 
          
வணக்கம். நான் பிரசன்னா மதுரையில் இருந்து.
உங்களின் " நீ தானே என் பொன் வசந்தம்" படத்தினை பார்த்தேன்.
( jazz தியட்டரில் ஒபெனிங்க்  ஷோ & மெலோடியில் நேற்று)
மிக் நீண்ட நாள் கழித்து  அருமையான காதல் படம். ஹம்ம் எத்தனை  நாட்களாகி விட்டது இது போன்றதொரு நெகிழ்வான படம் பார்த்து???
அன்பில் தொலைந்து போதல் இத்துணை இனிமையானதா என்ன? 
 படத்தின் துவக்கத்தில் வரும் ..... " வருண்- நித்யா " சில காதல் தருணங்கள் 
இது போன்ற தருணங்களை நம் வாழ்விலும் எதோ ஒரு நொடியில் நாமும் கடந்து வந்து இருக்கிறோம் எனபதை படம் முடிந்து வெளியில் வருகையில் மனம் நினைத்து  பார்க்க தவறவில்லை.
அந்த அந்த வயதிற்கே உரிய குறும்புகளோடும் தடுமாற்றங்களோடும் வருணும் நித்யாவும் தன பருவங்களை இசை ஞானியின் இசை கோர்வையோடு  கடந்து போகையில் நாமும் உடன் சென்று விடலாம் என தான் தோன்றுகிறது.
*****************************************************************************************************
 இளையராஜா :
   
 படத்தின் இடையில் பாடல்கள் அது நமக்கு தெரியும்.
ஆனால் இங்கோ பாடல்களின் பல்லக்கு துணையில் தான் படமே பவனி வருகிறது.
ராக தேவனின் துணையில் மட்டுமே இது சாத்தியம் .
சாதித்து இருக்கிறீர்கள்  கெளதம்.
வாழ்த்துகள்.
பாடலே இல்லாத காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஆனாலும் சலிப்பு தட்டாத மனம் நெகிழும் பாடல்கள்.
முதலில் வரும் அந்த கல்லூரி பாடலை கூட தவிர்த்து இருக்கலாம். மற்றபடிஅனைத்துமே  நித்யாவின் இதழ்களின் இஷ்டபடி போல எல்லாம் சுகமே.
 படத்தின் ஆரம்ப காட்சிகளில் நினைவெல்லாம் நித்யா என ஜீவா பாடுகையில்  துவங்கும் ராஜாவின் கிடார் பின்னணி இறுதி வரை  இசை அட்டகாசம் செய்து இருக்கிறது என்று தான்  சொல்லி ஆக  வேண்டும்.
 ராஜாவின் குரலில் தொடங்கும் " வானம் மெல்ல" பாடலில் கண் முன் கடந்து போவது வருண் நித்யாவின் இளமை காலம் மட்டும் அல்ல....
நம் ஆழ்மன  தோட்டத்தின் சில பூக்களின் வாசனையும் தான்.
"என்னோடு வா வா" " "சாய்ந்து சாய்ந்து" " காற்றை கொஞ்சம்" .. இப்படி அனைத்தும் அவர்களின்  வாழ்வையும் காதலையும்  நமக்கு கண்முன் பரிமாறி கொண்டே செல்கிறது.
 நித்யா, வருண் தனக்கு இல்லை  என தெரிந்த பின் பேருந்தில் செல்கையில் மீண்டும் இளையராஜா " இதற்க்கு தானா  ஆசை வைத்தாய்" என் மீண்டும் வந்து விடுகிறார்.மனம் கனத்து போய்  விடுகிறது.
 " என்ன குரல் டா  இந்த ஆளுக்கு " அசத்தவும் செய்றார்,,, அழவைக்கவும் செய்யுதேன்னு அங்கங்கே திரை அரங்கில்  கேட்டது மறுக்க முடியாத உண்மையும் கூட.தான்.
*******************************************************************************************************
 கெளதம் வாசுதேவ் மேனன்: 
    
 எப்படி சார் உங்களால மட்டும் ஹீரோயின இவ்ளோ அழகா காட்ட முடியுது.
மின்னலே : ரீமாசென் ( அதற்க்கு பிறகு எந்த  படத்திலும் அவரை யாருமே அவ்ளோ அழகாக காட்டவே இல்ல)
" விண்ணை தாண்டி வருவாயா " த்ரிஷா " 
காக்க காக்க " ஜோ "
வேட்டையாடு விளையாடு ' ஜோ மற்றும் கமலினி முகர்ஜி ( இதுல கமலினி அவ்ளோ அழகு)
வாரணம் ஆயிரம் 'சமீரா "
இந்த அழகு தேவதைகளின் வரிசையில் ....
 சமந்தா - செம அழகு சார். பொன்னா  அது... கண்ணு ரெண்டும் ரெண்டு ஹைகூ கவிதை. 
 நீங்கள் வைத்து இருக்கும் ஷாட் எல்லாமே தனி தனி கவிதை.
 நாங்களும் கூட வருண் போல " தேவதை டா மச்சான் அவ " என்று சொல்லியே ஆக வேண்டும்.
 அந்த மொட்டை மாடி ஷாட் எல்லாமே ரொம்ப சூப்பர் 
அதிலும் இண்டெர்வலுக்கு  முன் வரும் அந்த 20 நிமிடங்கள் அருமை 
எந்த கட் ஷாட் இல்லாமல் " கதவை திறந்து வந்து சமந்தாவை  கட்டி பிடித்து சுற்றுவதில் இருந்து சண்டை போட்டு பிரிவது வரை" அவ்ளோ அருமையான படப்பிடிப்பு.
**********************************************************************************************************
 சமந்தா 
      
 உதட்டில் கை வைத்து கொண்டு அவரின் பாவங்கள் அது வெட்கமா... சிரிப்பா ... கோபமா,,,, ஆச்சர்யமா என கலந்து கட்டி அடிக்கிறார்.
சமந்தா அவ்ளோ அழகு 
சமந்தாவின் குரல் ( அவருடையதா இல்லை பின்னணியா ) அது இன்னும் மெருகு ஏற்றுகிறது அந்த காதலுக்கு.
 ஜீவா சொல்வது போல "கார்  ஸ்டார்ட் ஆகுற மாதிரி  சிரிப்பா அவ "
உண்மை தான் அது,,,,
ஆனாலும் அவர் சிணுங்கும் போதும், சிரிக்கும் போதும் , சினம் கொள்ளும் போதும், தன்னையே திட்டி கொண்டு கதறும் போதும் அந்த அவரின் காந்த குரல் அந்த காட்சிக்கு மேலும் வலு சேர்க்கிறது .
சில உதாரணங்கள் 
" நான் ஒரு physiology ஸ்டுடென்ட் ம்ம்ம் எனக்கு என்ன பிடிக்கும்...ம்ம்ம்  எனக்கு நீ மட்டும் போதும் டா ... " என்றும் கூறும் போது ...
முத முறையா  டிராபிக் சிக்னலில் நிக்குறது ரொம்ப பிடிச்சு இருக்கு. என்று கூறும் போதும்...
" அங்க நெறய பொண்ணுங்க இருகாங்க,,, நமக்கு நடுல உக்கார வச்சுபோமான்னு ஜீவா கேட்கையில்..சிரித்து கொண்டே ஜீவாவை மிகவும் நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டு தனக்கு பக்கத்தில் இடம் காட்டும்  போதும் ,,,,,,,
"சொதப்பிட்டேன்" என்று அக்காவின் மடியில்  படுத்து கதறும் போதும்  அவரின் காதல் நம் கண்களையும் நீர்க்க செய்கிறது. அவர் மீதும் கோபம் கூட வருகிறது.
" நம்ம ரெண்டு பேருக்குமே ஒரே நண்பர்கள் என ஜீவா சொல்லும் பொது " அவங்க உன்ன பத்தி பேசுறதே இல்ல " என சொல்கையில் அவரின் தவிப்பும் ஏக்கமும் நம்மிடமும் தொற்றி "கொல்கிறது ".
***********************************************************************************************************
ஜீவா 
     
அவரின் மிக ஆழமான படைப்புகளில் மற்றும் ஒரு மைல்கல்.
பள்ளி கட்சிகளில் சற்று பொருந்தாமல் தான்  போகிறார்.
ஆனால் அவர் கண்களில் காதல் எப்போதுமே சுருதி குறையாமல் தாளம் போடுகிறது.
சமந்தாவை நீ தான்  என் பொன் வசந்தம் என ரசிக்கும் இடங்களாகட்டும்... அவர் தன்னை புரிந்து கொள்ளவில்லையே  என தவிக்கும் இடத்திலும் ஒரு நல்ல காதலனின்  ஏக்கத்தை கண் முன் நிறுத்துகிறார்.
இறுதி காட்சியில்  சமந்தாவின் தந்தையிடம் தன இத்துணை ஆண்டு காதலை வெளிபடுதுகையில் நாமும் அவருக்கு துணையாய் தலை ஆட்டுகிறோம்.
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
ஒரு சில கேள்விகள்.
ஒரு பெண் பார்க்கும் படலம் தோற்று போகிறது.
சரி அதற்காக இவ்ளோ சோகமாகவா ஒரு வீட்டில் இருப்பார்கள்?
இந்த ஒரு நிகழ்வு ஜீவாவின் மனதை மாற்றட்டும் அதற்காக,,,, அவரை தவிர எதை பற்ற்யுமே சிந்திக்காத சமந்தாவை விட்டு விலகி போதல் நியாயம் இல்லையே..
அவரிடம் பேசி புரிய வைக்க எந்த முயற்சியுமே செய்யாமல். சமந்தாவின் கோபத்தை மட்டும் குற்றம் சொல்வது நியாயம் இல்லையே..
இறுதி காட்சிகளில் இத்துணை சண்டைக்கும் தான் தான் காரணம் என சமந்தாவை தன வாயாலேயே ஒத்து கொள்ள செய்வது எப்படி சரி ஆகும் ?
அவரை விட்டு IIm  கோழிகோடு செல்வதை இவ்ளோ வெறுப்பாக சமந்தாவிடம் மொட்டை மாடியில் சொல்ல வேண்டியது இல்லையே...
அவருக்கு possessiveness அதிகம் என தெரிந்தும்.... 
சமந்தாவை பிரிந்த அந்த நாலு வருடங்களில்... MBA முடித்து வேலைக்கு சென்று.. அண்ணன் திருமணம் முடித்து,,, அப்பா அம்மா ஆஸ்திரேலியா செல்வது... இது அனைத்தும் சாத்தியமா என்ன?
ஜீவா எங்கே வேலை பாக்கிறார்..
சந்தானமும் அவரின் காதலியும்  ஜீவாவை எங்கு சந்திகிறார்கள் 
ரயில் மினி பஸ் மற்றும் பல வாகனங்கள் பிடித்து ஜீவா எங்கு இருந்து மணப்பாடு வருகிறார்?
இப்படி சிற்சில கேள்விகள்........
கிளைமாக்ஸ் 
செறிவான மற்றும் நெகிழ்வான படைப்பு தான் .
ஆனாலும் ஒரு சிறு வருத்தம்.
நித்யா வருனிடம் கிரிக்கெட் தவிர்த்து இன்னொன்றும் கற்று கொண்டார்.
அதை முதலிலேயே செய்து இருந்தால் இவ்ளோ சண்டையே வந்து இருக்காது.
உண்மைதான்.
ஆனால் எங்களுக்காவது அதை முழுதாய் காட்டி இருக்கலாமே...
ஆச்சர்ய குறி  இல்லாத  கவிதையா ?
முத்தம் இல்லாத காதலா ?
8 வயசுல அது தப்பு தான் ..
ஸ்கூல் படிக்கும் போதும் கூட அது தப்பு தான் ...
ஆனால் காலேஜ் படிக்கும் போது  தப்பே  அது தப்பே இல்லையே சார் ...
அப்ப கூடவா ஸ்க்ரீன் போடணும்...
ஆனாலும் நீங்க ரொம்ப அநியாயம் பண்ணிடீங்க கெளதம் சார்..

இருந்தாலும் யார் தொல்லையும் இல்லாம ஆழ்மனசுகுள்ள ஒரு சுற்றுலா போக உதவனதுக்கு நன்றி கெளதம் சார்.
தொடர்ந்து இது போன்ற படைப்புகள எதிர் பார்க்கிறேன் .

அன்பு வாழ்த்துகளுடன் 
பிரசன்னா 

No comments:

Post a Comment