Wednesday, April 14, 2010

பண்பலைகள் படுத்தும் பாடு....

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


இனிய காலை வணக்கம். சமீபமாக உங்கள எழுத்துகளில் நகைசுவை சற்று தூக்கலாக இருக்கிறதே… உங்களின் இந்த கட்டுரையை யாராவது வாசிக்க சொல்லி விட்டு கண்ணை மூடி கொண்டு கேட்டால் அப்படியே ஒரு பண்பலை ஒலிபரப்பை நேரடியாக கேட்டது போலவே இருக்கும்.

தகவல் தொழிநுட்பம் வளர்ந்து விட்ட இன்றைய சூழ்நிலையில் பண்பலைகளின் பங்களிப்பை இன்று நாம் ஒதுக்கி விட முடியாது. பல சிறிய நிறுவனங்களின் விளம்பரங்களால் பலன் அளித்தும் பலன் அடைந்தும் கொண்டு இருக்கும் இது போன்ற பண்பலைகள் பல மாவட்டங்களில் வேருன்றி போய் இருக்கின்றன.

ஒரு நல்ல விளம்பரதாரர் எனவும் , ஒரு மிக சிறந்த பொழுது போக்கு அம்சமாகவும் இவர்களின் பணி பாராட்டுக்கு உரியது தான். ஆனால் அந்த மாவட்ட வட்டார வழக்கில் பேசுகிறேன் என இவர்கள் தமிழை படுத்தும் பாடு சொல்லி மாளாது.

ஒரு பாடலை விளம்பரங்களுக்கு இடையில் இவர்கள் போடுவதில் இருக்கும் ஆர்வம் அந்த பாடல் பற்றிய சரியான் தகவல்களை நேயர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் சிறிதும் இல்லை.

மதுரை பண்பலை ஒன்றில் நேற்று காலையில் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்கிறேன் என ஒரு தொகுப்பாளினி தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என சொல்கிறார். பொங்கல் அன்று என்ன வாழ்த்துகள் கூறுவார் என தெரியவில்லை.

பாரதியார் பிறந்த நாள் அன்று ஒருவர் பாரதியாருக்கே வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.

தமிழ் பற்றியும் தமிழ் பேச்சுக்கள் பற்றியும் சரியான விழிப்புணர்வு இல்லாத இவர்களின் குரல்களை கேட்டு தான் தமிழனின் பொன் காலை பொழுது விடிகிறது ….

என்ன செய்வது தமிழுக்கும் தமிழனுக்கும் வந்த நவீன சோதனை…..

மேற்சொன்ன அனைத்தையுமே உங்களின் இந்த கட்டுரை புட்டு புட்டு வைக்கிறது.



அன்புடன்

பிரசன்னா

Monday, April 12, 2010

நடுத்தர வர்க்கத்தின் ஆன்மீகம்...

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


எப்படி உங்களால் இப்படி எழுத முடிகிறது.... வடிவேலு கூறுவது " இப்பவே கண்ண கட்டுதே.." ஆன்மீகம் நம் சராசரி நடுத்தர மக்களிடம் சென்று சேர்ந்து கொண்டு இருக்கும் விதமும் அதனை அரைகுறையாய் புரிந்து கொண்டு அவர்கள் படும் பாடும் அவர்கள் படுத்தும் பாடும் இதனை எளிமையாகவும் விலா நோக சிரிக்கும் வகையிலும் இதுவரை எழுத பட வில்லை என்றே நினைக்கிறேன்.

இப்படியே போனால் எங்கே இந்த கட்டுரை என்னை பற்றியும் எதாவது எழுதி விடுமோ என்று சற்று பயந்து தான் போனேன்.

ஆனால் நகைசுவை என்ற ஒன்றையும் தாண்டி இந்த கட்டுரை புரிய வைக்கும் அற்புதமான் விசயமாக நான் கருதுவது என்னவென்றால்... நாம் வெளிப்படுத்தி கொண்டு இருக்கும் பல கருத்துக்கள் நம்முடைய ஆழமான் புரிதல் இல்லாமலே வெளிவந்து கொண்டு இருக்கிறது என்பதை தான்,

எனக்கும் கூட கற்றவைகளை பற்றிய சில சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது இந்த கட்டுரை.



தொடர்ந்து இப்படியும் எழுதுங்கள்



பிரசன்னா

பயணம்....

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


இட வசதி இன்மை என்ற நிலையில் இருந்து இன்று நாம் நம் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்புகளை அதிகம் பெற்றிருக்கும் போதும் இய்றக்கை உந்துதல்களை வெளிபடுதுகையில் நாம் காடும் மிக சின்ன கவனக்குறைவு கூட நாம் சார்ந்து இனம் பற்றிய ஒரு தவறான் பார்வையை மற்றவர்களின் கவனத்தில் ஏற்படுத்தி விடும் என்பதை உணர்த்தி உள்ளது அந்த தமிழன் பெற்ற அறை.

சில நேரங்கில் சில கடுமையான தண்டனைகள் தான் பல பெரிய இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பயணம் ஆழ்மனதில் ஏற்படுத்தும் அற்புதமான விசயங்களை கோர்வையாய் வெளிபடுதுதல் ஒரு கலை என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து கொண்டு இருக்கிறது கும்பமேளா.....

பகிர்ந்து கொண்டமைக்கும் பகிர இருப்பவைக்கும்  சேர்ந்த நன்றிகள்.



அன்புடன்

பிரசன்னா

Friday, April 9, 2010

மத மாற்றம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


இனிய மாலை வணக்கம். சற்று நீண்ட இடைவெளி விழுந்து விட்டது தங்கள் வாசிப்புகள் இல்லாமல்….

மதம் பற்றியும் மதமாற்றம் பற்றியும் நம் மக்களுக்கு இன்னும் பல விசயங்களை நாம் விளக்கியாக வேண்டி உள்ளது. நம் இந்திய தேசத்தில் மதம் என்ற ஒன்றே உண்மையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும், ஏன் எனில் பரம்பொருளை அடைவதர்க்கான வழி இங்கே அனைவருக்கும் பொதுவாகத்தான் வழங்க பட்டு இருந்தது ஆரம்ப காலத்தில். நம் நாட்டிற்க்குள் அந்நியர்களின் ஆதிக்கம் அதிகமான போது தான் இந்து மரபு எங்கே மறைந்து போய் விடுமோ என்ற வீண் பயத்தில் உருவானது தான் பல சடங்குகளும் சம்ப்ரதாயங்களும். இதன் வளர்ச்சி இந்து மதம் என்பது வசதி படைத்தவன் கையில் ஆடும் பொம்மையாய் மாறி போனது.

தற்போதய நிலையில் ஒப்பிட்டு பார்த்தால் இந்து மதத்தை விட மற்ற மதங்கள் பொருளாதார கருத்து சுததந்திர நிலையில் வளர்ச்சி அடைந்த நிலையில் இருப்பது போல தெரியலாம். ஆனால் இந்து மதத்தில் நம்மை இறுக்கி பிடிக்கும் கட்டுபாடுகள் என ஒன்றை கூட எடுத்து காட்ட நம்மால் முடியாது. ஆனால் மாற்றங்கள உண்டு பண்ண முயற்சிக்கும் ஏனைய மதங்கள் அனைத்திலும் முதலில் இருக்கும் கனிவு இறுதி வரை இருக்குமா என நிச்சயம் கூற முடியாது.

பொருளாதாரம் தவிர்த்து அக வளர்ச்சி தான் தன்னுடைய தேவை என இருப்பவர்களுக்கு எந்த மதமும் தடை கல்லாக இருக்க முடியாது. ஆனால் தான் முதல் தேவை பொருளாதாரம் என இருப்பவ்ரக்ளுக்கு மாறும் மதம் ஒரு வேளை சிறைச்சாலை ஆக கூட மாறலாம்.

ஒன்று தேர்ந்தெடுபவர்கலுக்கு கவனம் வேண்டும், அல்லது அரசாங்கங்கள் இத்றக்கென ஒரு சரியான சட்ட முன்வடிவமாவது ஏற்படுத்தி தர வேண்டும்

இரண்டில் ஒன்றாவது நடைபெறாத வரை மதமும் மாறும் மதமும் நம்முடைய தீராத தலை வலியாக தான் இருக்கும்.