உன் மீது பூ சொரிந்த
அந்த பூவரச மரம்.....
நீ இல்லாத இந்த விடுமுறை நாட்களில்
ஏங்கி தானே போகும்
இனிய மாலை வணக்கம் ஒன்றே கடவுள் என கூறும் இந்து மதம் அந்த கடவுளை அடையும் வழியாக கூறுபவை எல்லாம் தர்க்க அறிவிற்கு எட்டா கனியாகவே இருக்கிறது என்று தான் நினைத்து இருந்தேன். பொதுவாகவே தத்துவங்கள் எல்லாமே புரிந்து கொள்ள எளியன அல்ல என்ற கருத்து உண்டு.( எனக்கும் கூட)ஆனால் புரிதல் என்பது ஆழமான தேடலாக மாறும் போது எந்த வித கேள்விகளுமே இல்லாம புதிய தத்துவ உலகம் நமக்காக திறக்கும் என்பதை உங்களின் இந்த கட்டுரையின் ஆரம்பம் எனக்கு உணர்த்தி இருக்கிறது. ஆம். அர்ஜுனனின் தேடல் தான் முழுமையான கீதை. நானும் இது நாள் வரை கீதை என்பது புரிந்து கொள்ள தேவை இல்லாத மத நூல் என்று தான் நினைத்து இருந்தேன் ஆனால் இனிமேல் இதனை பிரபஞ்சத்தை உணர முற்படும் முயற்சிக்கு தேவையான் உந்து சக்தியாக பார்ப்பேன். உங்களின் மூலமாக கீதை எளிமையாக கிடைக்க போவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறன். 
