Wednesday, March 10, 2010

அவள் பெயர் தமிழ் அரசி - ஒரு பார்வை


கடந்த ஞாயிறு அன்று தினமலர் மூலமாக கிடைத்த பரிசு டிக்கெட்டின் மூலமாக மதுரை அம்பிகா திரை அரங்கில் இந்த படத்தை பார்த்தேன். நான் சற்று தாமதமாக சென்ற காரனத்தால் நான் செல்லும் போதே படம் துவங்கி இருந்தது.
பால்ய காலத்தில் இருந்தே தன்னுடன் தீரா நட்பு கொண்ட தமிழ் அரசியிடம் தன மனதை தொலைத்து விட்டு , வாழ்க்கை எதிர் பாராமல் வீசி சென்ற ஒரு பானத்தால் நிலை குலைந்து போய் அவளை தொலைத்து விட்டு பின்னர் தேடி அடையும் ஒரு கிராமத்து வாலிபனின் கதை.
கதாநாயகனின் பயணம் என்றாலும் நாயகிக்கே முதல் இடம்.
தலையில் உணவு வேண்டும் கூடை ஏந்தி செல்லும் இடம் ஆகட்டும் , சிறு வயது நாயகன் பறவையை பற்றி அழகாய் ஒரு பெயர் கூறும் இடத்தில காட்டும் பாவனை ஆகட்டும் அந்த குழந்தை கதாநாயகி அத்தனை அழகு.
கள்ளம் கபடம் இல்லா கிராமத்து பெண்ணாய் வளர்ந்த நாயகி - நந்தகி . முதல் பரிசு வாங்கும் இடத்திலும் நாயகனை தேடுவது, தன்னை ஒதுக்க நாயகன் முற்படுகையில் துயரம் அடைவது, தன் மொத்த வாழ்க்கையும் பறி போய் விட்ட நிலையில் விட்டதை வெறித்து பார்ப்பது வரை ஒரு தேர்ந்த நாயகிக்கான அத்தனை அடையாளங்களும் ஒருமித்தநாயகி என கைதட்டும் வகையில் நடிப்பாற்றலை வெளிபடுத்துகிறார் . சபாஷ் நந்தகி
ஒரு கிராமத்து வாலிபனுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி கொண்டு இருக்கிறார் ஜெய் . அழுத்தமான இடங்களில் இன்னும் முகபாவனைகளில் சற்று கவனம் செலுத்தினால் நல்லது.
தோல்பாவை கூத்தை தனக்கே உரிய களமாய் எடுத்து ஆண்டுஇருக்கும் இயக்குனர் மீரா கதிரவனுக்கு சிறப்பான பாராட்டுக்கள்.
வளர்ந்து வரும் நாகரீகம் பண்டய கலைகளை படு குழிக்குள் தள்ளி விட்ட அவலம் கண் முன்னால் விரிந்து கண்களை குளமாக்குகிறது.
இளமை காலமாக விரியும் முதல் பாதி அழகாய் இருந்தாலும் இரண்டாம் பாதி சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். தனக்கு அருகில் பணத்தை பார்த்ததும் கதாநாயகி அடையும் துயரம் நம்மை சிறிதே பாதிக்கிறது. எப்படி இருந்தாலும் பாட்டி தாத்தா வீட்டிற்க்கு விடுமுறையில் சென்று வந்த அனுபவத்தை தரும் இந்த படைப்பை நிச்சயமாக பாராட்டித்தான் ஆக வேண்டும்.
அவள் பெயர் தமிழரசி---- ஒரு புதிய அனுபவம்

No comments:

Post a Comment