அன்புள்ள ஜெயமோகனுக்கு,
இனிய மாலை வணக்கம். இந்த ‘அங்காடி தெரு” எனக்குள் ஒரு ஆழமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏன் என்றால் இந்த கதை நடைபெறுவதாக காட்டப்படும் டிநகர் ரெங்கநாதன தெருவை கடக்கும் போதெல்லாம் நினைத்து கொள்வேன்,( சென்னையில் இரண்டரை வருடம் இருந்த போது தினமும் ஒரு முறையாவது அந்த தெருவை கடக்க வேண்டிய சூழ்நிலை வந்து விடும்) எத்தனையோ பகுதிகளை வைத்து திரைப்படம் எடுக்கிறார்கள். இந்த தெருவில் ஒரு நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்கள் வியாபரம் செய்ய உதவி செய்யும் எத்தனையோ உயிர்களை பற்றி ஒரு படைப்பு ஏன் இன்னமும் வெளி வரவில்லை என நினைப்பேன். ஏன் எனில் அந்த அலங்காரங்களுக்கு மத்தியில் வெளிபடுத்த முடியாத எத்தனையோ இளம் நெஞ்சங்களின் சோகம் புதைந்து கிடக்கிறது. ஏக்கம், ஆசை, பாசம்,காதல் காமம் ,துரோகம் என ஒரு நல்ல இலக்கிய படைப்பிற்க்கான அத்தனை தளங்களும் அந்த தெருவில் இருந்து நம்மால் எடுக்க முடியும். இந்த அங்காடி தெரு பற்றிய முதல் அறிவிப்பு வந்ததில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறேன். இன்று மாலை காட்சியே சென்று விட வேண்டும் என நினைத்து இருந்தேன்.ஆனால் முடியாமல் போய் விட்டது. நிச்சயம் இரண்டொரு நாட்களில் பார்த்து விட்டு என் கருத்தாக்கங்களை பதிவு செய்கிறேன். ஒரு முறை என் நண்பர் ஒருவரை பார்க்க வேண்டி இருந்ததன் காரணமாக இந்த தெருவின் பிரம்மாண்ட கடைகளில் பணி புரியும் கடை கோடி ஊழியர்கள் தங்கும் விடுதிக்கு செல்ல வேண்டி வந்த போது மனம் மிகவும் புண்பட்டு போனது . பொருளாதாரம் ஒன்றின் காரணமாக வேர்விட்ட ஊரை தொலைத்து விட்டு அங்கு வந்து பணி புரிந்து கொண்டு இருக்கும் உள்ளங்களின் வலி அவர்களின் முகங்களில் கண்டேன். அந்த நெஞ்சங்களின் தீராத மன சுமையை இந்த படம் சிறிதாவது ஆற்றும் என நம்புகிறன்.
மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
பிரசன்னா

No comments:
Post a Comment