Wednesday, March 10, 2010

ஜெயமோகனுக்கு பதில் கடிதம்


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இனிய மாலை வணக்கம். எழுதும் ஆர்வம் இருக்கும் அனைவரும் சிறப்பாக எழுதி இருக்கிறோம் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் தன்னை தானே சுய பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டு பார்க்கையில் தான் தன்னுடை எழுத்தின் சாரமின்மை புலப்படும். சில நேரம் கவனத்துக்கு வரும். பல நேரங்களில் மறைந்து போகும். ஆனால் தன் எழுதுக்களை சீர் தூக்கி பார்க்கும் இந்த தன்மையும் உங்களை போல் விமர்சகர்களும் உடன் இருந்தால் ஆரம்ப நிலை எழுத்தாளர்களும் (என்னை போன்ற ) மிக சிறப்பாக எழுதலாம் என்பது என் நம்பிக்கை.
மேற்கண்ட உங்கள் கட்டுரையில் ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களை வைத்தே அவனின் அக வலிமையை ஆராயும் உங்கள் சிந்தனையும், குறைகளை பெருதுபடுத்தி ஒரு நல்ல எழுத்தாளனின் வளர்ச்சியை தடுத்து விட கூடாது என்ற எண்ணமும் பெரிதும் தென்படுகிறது.
உங்களின் எழுத்துக்களால் நாள் தோறும் கூர் தீட்ட பட்டு கொண்டு கொண்டு இருக்கும் பல நூறு பேரில் நானும் ஒருவன் என கூறுவதில் சற்று பெருமை தான்.

அன்புடன்
பிரசன்னா

No comments:

Post a Comment