Wednesday, March 10, 2010

தமிழரசனுக்கு பதில்....

அன்புள்ள தமிழரசனுக்கு,
அறிவுரை கூறுபவரின் யோக்கியதை என்ன என நாம் பார்க்க ஆரம்பித்தால் முதலில் தொலைவது நம் நிம்மதி தான். நம் இந்திய மக்களிடம் இருக்கும் மிக பெரிய துன்பம் தர கூடிய எண்ணம் என்ன வென்றால் தனக்கு பிடித்தமான நபரின் எல்லா செயல்களும் தனக்கு சாதகமாகவே இருக்க வேண்டும் என நினைப்பது. இது எத்தனை நூற்றண்டானாலும் சாத்தியமே ஆகாது. ( விளையாட்டு சினிமா குடும்பம் அலுவலகம் என எத்தகைய போராட்டம் ஆனாலும் அதற்கு பின்னணியில் நிச்சயம் இப்படி பட்ட சிந்தனை தான் இருக்கும்.) ஏன் என்றால் இந்த உலகின் ஒவொவொரு உயிரும் தனக்கே உரிய தனித்தன்மை கொண்டது. இது மற்றவரோடு பொருந்தி போனால்தான் துன்பம். சகித்து கொண்டு போவது எப்போதும் நீடிக்காது. புரிந்து கொள்வது தான் நிரந்தர தீர்வு என்பது என்னுடைய கருத்து. நித்தியானந்தா செய்தததை நான் ஞாயம் கூற வில்லை ஆனால் நிம்மதி என பார்க்கையில் தொலைந்ததன் சதவிகிதம் மக்களிடம் தான் அதிகம் இருக்கும் அவரை விட.
…… உங்களின் அதனை மகிழ்ச்சிக்கும் ஆணிவேர் உங்களிடம் தான் இருக்கிறது இதனை நிறைவேற்ற உங்களை விட யாரை நீங்கள் தேடினாலும் நிச்சயம் உங்களுக்கு மிஞ்ச போவது மிக பெரிய ஏமாற்றம் தான்…..
( இந்த சம்பவம் என்னை பொறுத்த வரை மற்றும் ஒன்று என்ற வகை தான் )
தவறுகள் ஏதேனும் இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும்.

மீண்டும் சந்திப்போம்

பிரசன்னா

No comments:

Post a Comment