அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். உங்களின் இந்த கடிதம் என்னை சற்று பிரம்மிப்பில் ஆழ்த்தி விட்டது. இலக்கியம் என்பது ஆன்மீகம் என்ற எல்லைக்குள் வராது என்று தான் இது நாள் வரை நினைத்து இருந்தேன். ஆனால் உங்களின் இந்த கட்டுரை என்னுள் பல மாறுதல்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி விட்டது. நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. நம் மக்களுக்கு எப்போதுமே எதாவது அதிசயம் நிகழ வேண்டும். அதனை பெருமையாக பேச வேண்டும். அதில் ஒரு அங்கமாக மாற வேண்டும் அதனை நிகழ்த்துபவர் உலகின் கடவுளாக மாறி விட வேண்டும். இந்த பிம்பம் மக்களால் ஏற்றப்பட்டது. இப்போது மக்கின் கோபம் நித்தியானந்த சுவாமிகள் தவறு செய்ததால் ஏற்பட்டது அல்ல. தங்களின் போலியான நம்பிக்கை பாழ் பட்டு விட்டதே என்ற ஆத்திரம் தான். இங்கே வெளிப்பட்டு இருப்பது அவர்களின் அகங்காரம் தானே தவிர இங்கே எந்த கலாசாரமும் சீர்கெட்டு போக வில்லை. பிரபஞ்சத்தின் பரந்த வெளிகளுக்குள் தன்னை இணைத்து கொள்ள ஆசை இருப்பவன அதற்க்கான சாவியை வைத்து இருப்பவன் கையில் இருக்கும் சாவியை பற்றி தான் பார்க்க வேண்டுமே அன்றி அந்த சாவி இருக்கும் கை அழகாக இருக்கிறதா இல்லையா என பார்க்க கூடாது. இப்போது அது தான் நடந்து உள்ளது அவருடைய கருத்துகளுக்கு உண்மையிலேலே வலிமை அதிகம். மறுக்க முடியாது. முடிந்தால் அதனை பின்பற்றுவோம் இல்லையேல் ஒதுக்கி விட்டு நம் கடமையை செய்வோம். ஆனால் நம் மக்களால் இருக்க முடியாது. தான் உருவாக்கிய பிம்பம் அழியும் போது தான் மனிதனின் கீழான சொருபம் வெளிப்படும். இங்கே நடந்து கொண்டு இருக்கும் கூத்துகள் இனி வரும் காலத்திலும் தொடர தான் செய்யும். இவர்களை பாவம் அந்த ஆண்டவன் வந்தால் கூட காப்பாற்ற முடியாது.
பிரசன்னா
By Prasanna on Mar 4, 2010
No comments:
Post a Comment