Wednesday, March 10, 2010

தமிழ் அரசனின் கேள்வி....

வணக்கம் பிரசன்னா …

யார் சொல்கிறார் என்பதை பார்கதே . சொல்வதை மட்டும் கேள் என்கிறீர்கள்.
எனக்கு என்னவோ கண்டிப்பாக சொல்பவனின் யோக்கிதத்தையும் , சொல்லப்படுவதையும் அளந்து பார்க்கவேண்டும் என்று படுகிறது. அவர் பல நூல்களையும் , தத்துவங்களையும் அறிந்து சொந்த சரக்கு எதையும் அதில் கலக்காது நமக்கு சொல்வதாக இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வது போல அவரை நடத்தலாம். ஆனால் அவ்வாறு சொல்வதற்கு எந்த ஒரு நிறுவனத்தையும் நிறுவத்தேவையில்லை. ஒரு புத்தகம் போட்டால் போதும்.

ஆனால் இவ்விசயத்தில் நித்யாவை அவ்வாறு நடத்தலாகத்து. உள்ளொளி பெறாத ஒருவர் சொல்லும் எல்லா விஷயங்களும் கட்டுக்கதைகளாகவே இருக்கும். ஏனென்றால் அவர் எதையும் அனுபவித்து சொல்லி இருப்பாரா என்று ஐயம் எழுகிறது. அவர் சொன்ன எதாவது ஒருவிசயம் உங்களுக்கு தெளிவை , நன்மையை அளித்திருக்குமையின் அது நீங்கள் எடுத்துக்கொண்ட சொந்த முயற்சியால் ,தேடலால் விழைந்தது..

-தமிழ்

By tamizharasan on Mar 4, 2010

No comments:

Post a Comment