Thursday, July 17, 2014

கருணைக்கொலை

 
  
கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கக் கோரும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நிச்சயம் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்க கூடாது . நோய்க் கொடுமை நிச்சயம் துயரமானது தான்.

வலிகளை சுமக்கும் நோயாளியாகட்டும் அவரின் ரத்த உறவுகள் படும் துயரமாகட்டும் எல்லாவற்றிற்கும் மேலாக நோயின் காரணமாக ஏற்படும் பொருளாதாரத் துயரமாகட்டும் அனைத்துமே நிச்சயம் சகித்துக் கொள்ள இயலாதது தான்.ஆனால் அதற்க்கான தீர்வு கருணைக் கொலை அல்ல. 

நூறு சதவிகிதம் நம்பகத்தன்மை வாய்ந்த மருத்தவ முறைகளுக்கு இன்னும் நாம் ஆட்ப்படவில்லை.  ஒரு சில போலி மருத்துவர்கள், போலி மருந்துகள், காரணமே இல்லாத அதிக மருத்துவ செலவு, கவனக்குறைவால் ஏற்படும் உயிர் இழப்புகள் என  இப்படி மருத்துவ துறையின் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டுகள் அதிகம்.

இவை முழுமையாக களையப் படாமல் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கப் பட்டால் நடந்தது நூறு சதவிகிதம் கருணைக் கொலை தான் என்பதற்க்கான நம்பிக்கையினை யாரால் தந்து விட முடியும்.?

வெளிப்படையான நூறு சதவிகித நேர்மையான நிர்வாகம் சாத்தியப் படாத நம் தேசத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்காமல் இருப்பதே சிறந்தது. 

நோய் தீவிரமடைவதற்க்கும் ,சரியான நேரத்தில் தேவையான சிகிச்சை கிடைக்காமல் இருப்பதற்கும் வேறு சில காரணிகள் இருக்கின்றன.

நோயில் விழும் ஒருவரின் பின்னால் தவறான உணவு பழக்கம், கலப்படம் நிறைந்த உணவுகள், போதை பழக்கம், சக மனிதனை நேசிக்காமல் சுரண்ட மட்டுமே கற்றுக் கொடுக்கும் கல்விமுறை, நேசம் தொலைந்து போன குடும்பங்கள், சிதைந்து போன கூட்டுக் குடும்ப அமைப்பு இப்படி புறக் காரணிகள் நிறைய உண்டு.

இதை சரி செய்து விட்டாலே மகிழ்ச்சியான தலைமுறைகளை உருவாக்கி விடலாம். அதன் பின்னர் நோய் என்றால் என்னவென்ற தெரியாமல் கூட போய் விடலாம்.

நூறு வயது வரையும் கூட உடல் உழைப்பு நிறைந்த வயல் வெளிகளில் மிக ஆரோக்யமாக  வாழ்ந்து  மறைந்த பெருமை நம் தாத்தாக்களுக்கு உண்டு. நம்மாளும் அது முடியும்.

அனைத்திற்கும் மேலாக குற்றவாளிகளை தவிர்த்து ஏனையோர் இந்த பூமியில் வாழ வேண்டிய நாட்களை நிர்ணயம் செய்ய நாம் ஒன்றும் கடவுள் அல்ல. ( கொடும் குற்றவாளிகளுக்கு கூட கருணை மனு என்ற விலக்கு  உண்டு)

காலம் வந்ததும் இலைகள் தானே உதிர்ந்து பூமியை முத்தமிடும். அதுவரை நோயால் துன்பப் படும் நபர்களுக்கு கோப்பை நிறைய அன்பை பருகக் கொடுக்கலாமே?

Wednesday, July 16, 2014

தமிழ் சினிமாவின் பண்பட்ட வளர்ச்சி

                                                                                                                                                                                             




 1) ஒரு காலத்தில் வில்லன்கள் மட்டுமே மது அருந்தினார்கள்











2) பின்னர் காதலில் தோல்வியுற்ற நாயகர்கள் மது அருந்தினார்கள்


3) யாருமே எதிர்பார்க்காத வகையில் கதை நாயகர்களே மது அருந்தத் தொடங்கினார்கள்




 இறுதியாக நாயகியோடு சேர்ந்தும் மது அருந்தத் துவங்கி விட்டார்கள் (அரிமா நம்பி)




தமிழ் சினிமா மட்டும் அல்ல தமிழகமும் சேர்ந்தே வளர்ச்சியில் தள்ளாடுகிறது  (!)

இப்படி பட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைக்கையில் நெஞ்சம் நெகிழ்கிறது

Friday, May 3, 2013












பூ வைத்து கொள்ளும் பெண்களை விட...
அதை வைத்து விடும்............
ஆண்களின் வெட்கம் தான் அழகு

Friday, April 12, 2013

வாசகர் கடிதம்- விகடன்( 17/04/2013) இதழ்

ராகுல் காந்தி பிரதமராக எந்த நேரத்திலும் ஆதரவு அளிப்பேன் என பிரதமர் சொல்லி இருப்பது போதும்டா  சாமி ஆள விடுங்க என்பது போலவே இருக்கிறது.

மார்கண்டேய கட்ஜு கூறி வரும் கருத்துக்கள் அவர் இந்தியாவின் மனசாட்சி என முன்பு கூறியதை விட அவர் சர்சைகளையே பெரிதும் விரும்புகிறாரோ என்று தான் எண்ண தோன்றுகிறது.

பட்ட படிப்பு என்பதை இன்று வெறும் பணம்  பண்ணும் வேலை என்பதாக மட்டும் கொள்ளும் " கல்விதந்தைகளும் " " அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை நாட்டையே விழுங்கி விடும்  நச்சு களைகள்  வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

ஜெய்சங்கர் காலத்து வைரகடத்தல் கதைகளுக்கு இத்தனை  பில்டப்பா என்று தான்  எங்களுக்கும் கேட்க தோணியது " சேட்டை" பார்த்த பொழுது.

" உன் பாதையை நீயே உருவாக்கு. மத்தவங்க தான் அதில் வரணுமே தவிர நீ அடுத்தவங்க பாதையில  போக கூடாது என்ற அப்பாவின் வார்த்தைகளை மகள் எப்படி காப்பற்றி இருக்கிறார் என்பதை பார்க்க " கோச்சடயனுக்காக" நாங்களும் காத்து இருக்கிறோம்.

உறவுகளும் அன்பான நண்பர்களும் தான்  உண்மையான சொத்து என்று காலம் கடந்து உணர்ந்த வடிவேலுவின் மகள் திருமணம் சிறப்பாக நடந்தது போல  திரைப்பட துறையிலும் அவரின் செகண்ட் இன்னிங்க்ஸ் சிறப்பாக இருக்கு வேண்டும் என்பது தான் எங்களின்  ஆசையும்.

பாஸ்வேர்ட் முதல் வாரமே அருமையான உதாரணங்களுடன் பட்டையை கிளப்புகிறது.
அதிலும் அந்த நவீன ராமாயணம் சிரித்து சிரித்து  வயிறு வலி வந்தது தான் மிச்சம்.

ரொம்ப நாள் கழித்து  கட்டிட சுவர் நீள  நாக்கு அரக்கனை நியாபகபடுத்தி விட்டது  
" கேள்வி" சொல்வனம் கவிதை.

"மறக்கவே நினைக்கின்றேன்" மாரி  செல்வராஜின் புதிய தொடர் இன்னும் ஆழமான வார்த்தை பிரயோகங்களை  கொண்டு வந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

" ஒரு பொண்ண வேலைக்கு வச்சு நன்றி சொல்ல தெரியுது? வாங்கின கடன திருப்பி கொடுக்க தெரியலையா? தக்காளி! அப்பா சாமி இந்த செல் போன் இம்சைகளை புட்டு புட்டு வைத்தது.

" மச்சி ஒரு குவார்டர் சொல்லேன்" போன்ற கதாபாத்திரங்களை  தான் ஜீவாவிடம் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று அவர் சொல்வது மிகவும் தவறு. கொஞ்ச நாள் கழித்து அது போன்ற படங்கள் அவர் வரலாற்றில்  இருந்து தொலைந்து போய்  விடும். " நீ தானே என் பொன் வசந்தம்" போன்ற படங்கள் தான் காலம் கடந்தும் போற்றப்படும்.

மனிதர்களுக்கு வகிக்கும் பதவிகளில் இருந்து வேண்டுமானால் ஒய்வு தருவார்கலேயன்றி அவர் ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து ஒய்வு எடுக்க முடியாது என "சந்துரு" அவர்களின் பதில் மற்ற வழக்கறிஞர்களும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

" கடவுள் நினைத்தான்" மணநாள் கொடுத்தான்" அதை மனிதன் தான் தன்னுடைய அச்சு பிச்சு தனங்களால் கெடுத்தான் என்பதை வயிற்றை பதம் பார்த்து சொன்னது கட்டுரை.

"ஒவொரு பழமும்  ஒவொரு விதமாக உருளும் போல " போன்ற வர்ணனைகள் வண்ணதாசனுக்கு மட்டுமே சாத்தியமானது." கனியான பின்னும் நுனியில் பூ " நிஜமாகவே மனசை அள்ளி சென்றது என்றே சொல்லலாம்.


" அரசியலில் என் பயனுக்கு துளி கூட இஷ்டம் இல்லை " என்ற ஸ்டாலின் கூறிய அன்றைய  வார்த்தைகளை மெய்யாக்கி இருக்கிறார் உதயநிதி 

" யட்சன்" படபடப்பு விமானம் ஏறி பறந்து கொண்டு இருக்கிறது வாரவாரம் .

சமூகம் சார்ந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைகள் அவன் சார்ந்தவர்களாலேயே ஒரு உள்ளபிரள்வு நோயாக பார்க்க படுவதால் தான் நம் நாட்டு   இளைய தலைமுறை மேற்கத்திய நாடுகளின் பின்னால்  கை கட்டி  சென்று கொண்டு இருக்கிறது என்பதை வருத்ததுடன் பதிவு செய்து உள்ளது " ஆறாம் திணை"

"இங்கே 25 வயசு வரைக்குமே தமிழ் படிக்காமலேயே காலம் தள்ளிரலாம் " என்ற இயக்குனர் சசியின் வார்த்தைகளை  தமிழ் நாட்டு  இளைய தலைமுறையின் காதுகளை எட்டவே எட்டாது என்பது தான்  வலி மிகுந்த உண்மை.

ஒரு குட்டி அரசாங்கம் போல செயல்பட்டு தானே துயர் துடைத்த விகடனின் பணி கடலூர் மாவட்ட காற்றில் நீங்கா  இசையாய் ஒலித்து கொண்டே இருக்கும்.

அடையாளம் வேண்டி அண்டை நாட்டு  கதவை தட்டும் நம் இலங்கை தமிழர்கள் விரும்பவே விரும்பாத  ஒரு வலி மிகுந்த அடையாளம் தான் அகதி என்பதை உணர்த்தியது " அருள் எழிலனின் " கட்டுரை.

" சாமி சோறு போடுது" ஹாசிப்

Thursday, February 28, 2013

விகடன் விமர்சனம் 27/01/2013

தலைவா... 
உங்களுக்கு மட்டும் எங்க இருந்து பாஸ் பல்பு எரியுது . விஸ்வரூபம் படம் விமர்சனம் . அதே நேரத்துல பொக்கிஷம் படங்களும் 
கமல்- எம் ஜி ஆர் 
 கமல் - கலைஞர்  
கமல்- ஜெ ( அதுவும் இந்த போட்டோ இருக்கே!!! அடடே யாரோட தவம் கலஞ்சுதுன்னு எங்களுக்கு தானே தெரியும்) 
 கமல்- ரஜினி 
கலக்கிடீங்க போங்க...
ஏன் பாஸ் மூணு லட்சமா வருமான உச்ச  வரம்பு உயர போகுதுன்னு சொல்லி இருக்கீங்களே... அப்போ நான் எல்லாம் இந்த பிறவியில வரியே கட்ட மாட்டேனா ??? இல்ல விடவே மாட்டிங்களா ??  சத்தியமா நான் நல்லவன் பாஸ்... அதான் கேட்டேன் 
டெல்டாவில் புதை நெல் .....அந்த கயிறு நம் தலைக்கு மேலயும் தான் சுற்றி கொண்டு இருக்கிறது.... விவசாயி கவனிக்கபடாமல் போகும் போது ... அந்த கயிறு நம் கழுத்தையும் இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை....ஹாசிப் கான் கார்டூன் மனதை கனபடுத்துகிறது 
கமல் என்ற நடு  நிலையான கலைஞனுக்கு சமூக பொறுப்பு உண்டல்லவா என கேட்டு இருக்கிறீர்கள்... அந்த சமூக பொறுப்பு தான்  அந்த மாபெரும் கலைஞனுக்கு இந்த தமிழ் சமூகம்  தீராத  மன வருத்தம் தந்த போதும் மாறாத மௌனத்தையும்... வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை தான்  என்பதையும் இந்த  சமூகத்துக்கு உணர்த்தியது,,, இது கமல் மற்றும் அஹிம்சையின் விஸ்வரூபம் என சொன்னால மிகை ஒன்றும் இல்லை.  
ஏன் பாஸ் குஷ்பூ என்ன வெறும் முன்னால் ஹீரோயினா ... முன்னால் மாஸ் ஹீரோயினா,,,, " பயம்ன்னா எனக்கு என்னன்னு தெரியாதுன்னு" சொல்லி இருக்காங்களே 
  

Sunday, December 23, 2012

நீ தானே என் பொன் வசந்தம்

அன்புள்ள கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு, 
          
வணக்கம். நான் பிரசன்னா மதுரையில் இருந்து.
உங்களின் " நீ தானே என் பொன் வசந்தம்" படத்தினை பார்த்தேன்.
( jazz தியட்டரில் ஒபெனிங்க்  ஷோ & மெலோடியில் நேற்று)
மிக் நீண்ட நாள் கழித்து  அருமையான காதல் படம். ஹம்ம் எத்தனை  நாட்களாகி விட்டது இது போன்றதொரு நெகிழ்வான படம் பார்த்து???
அன்பில் தொலைந்து போதல் இத்துணை இனிமையானதா என்ன? 
 படத்தின் துவக்கத்தில் வரும் ..... " வருண்- நித்யா " சில காதல் தருணங்கள் 
இது போன்ற தருணங்களை நம் வாழ்விலும் எதோ ஒரு நொடியில் நாமும் கடந்து வந்து இருக்கிறோம் எனபதை படம் முடிந்து வெளியில் வருகையில் மனம் நினைத்து  பார்க்க தவறவில்லை.
அந்த அந்த வயதிற்கே உரிய குறும்புகளோடும் தடுமாற்றங்களோடும் வருணும் நித்யாவும் தன பருவங்களை இசை ஞானியின் இசை கோர்வையோடு  கடந்து போகையில் நாமும் உடன் சென்று விடலாம் என தான் தோன்றுகிறது.
*****************************************************************************************************
 இளையராஜா :
   
 படத்தின் இடையில் பாடல்கள் அது நமக்கு தெரியும்.
ஆனால் இங்கோ பாடல்களின் பல்லக்கு துணையில் தான் படமே பவனி வருகிறது.
ராக தேவனின் துணையில் மட்டுமே இது சாத்தியம் .
சாதித்து இருக்கிறீர்கள்  கெளதம்.
வாழ்த்துகள்.
பாடலே இல்லாத காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஆனாலும் சலிப்பு தட்டாத மனம் நெகிழும் பாடல்கள்.
முதலில் வரும் அந்த கல்லூரி பாடலை கூட தவிர்த்து இருக்கலாம். மற்றபடிஅனைத்துமே  நித்யாவின் இதழ்களின் இஷ்டபடி போல எல்லாம் சுகமே.
 படத்தின் ஆரம்ப காட்சிகளில் நினைவெல்லாம் நித்யா என ஜீவா பாடுகையில்  துவங்கும் ராஜாவின் கிடார் பின்னணி இறுதி வரை  இசை அட்டகாசம் செய்து இருக்கிறது என்று தான்  சொல்லி ஆக  வேண்டும்.
 ராஜாவின் குரலில் தொடங்கும் " வானம் மெல்ல" பாடலில் கண் முன் கடந்து போவது வருண் நித்யாவின் இளமை காலம் மட்டும் அல்ல....
நம் ஆழ்மன  தோட்டத்தின் சில பூக்களின் வாசனையும் தான்.
"என்னோடு வா வா" " "சாய்ந்து சாய்ந்து" " காற்றை கொஞ்சம்" .. இப்படி அனைத்தும் அவர்களின்  வாழ்வையும் காதலையும்  நமக்கு கண்முன் பரிமாறி கொண்டே செல்கிறது.
 நித்யா, வருண் தனக்கு இல்லை  என தெரிந்த பின் பேருந்தில் செல்கையில் மீண்டும் இளையராஜா " இதற்க்கு தானா  ஆசை வைத்தாய்" என் மீண்டும் வந்து விடுகிறார்.மனம் கனத்து போய்  விடுகிறது.
 " என்ன குரல் டா  இந்த ஆளுக்கு " அசத்தவும் செய்றார்,,, அழவைக்கவும் செய்யுதேன்னு அங்கங்கே திரை அரங்கில்  கேட்டது மறுக்க முடியாத உண்மையும் கூட.தான்.
*******************************************************************************************************
 கெளதம் வாசுதேவ் மேனன்: 
    
 எப்படி சார் உங்களால மட்டும் ஹீரோயின இவ்ளோ அழகா காட்ட முடியுது.
மின்னலே : ரீமாசென் ( அதற்க்கு பிறகு எந்த  படத்திலும் அவரை யாருமே அவ்ளோ அழகாக காட்டவே இல்ல)
" விண்ணை தாண்டி வருவாயா " த்ரிஷா " 
காக்க காக்க " ஜோ "
வேட்டையாடு விளையாடு ' ஜோ மற்றும் கமலினி முகர்ஜி ( இதுல கமலினி அவ்ளோ அழகு)
வாரணம் ஆயிரம் 'சமீரா "
இந்த அழகு தேவதைகளின் வரிசையில் ....
 சமந்தா - செம அழகு சார். பொன்னா  அது... கண்ணு ரெண்டும் ரெண்டு ஹைகூ கவிதை. 
 நீங்கள் வைத்து இருக்கும் ஷாட் எல்லாமே தனி தனி கவிதை.
 நாங்களும் கூட வருண் போல " தேவதை டா மச்சான் அவ " என்று சொல்லியே ஆக வேண்டும்.
 அந்த மொட்டை மாடி ஷாட் எல்லாமே ரொம்ப சூப்பர் 
அதிலும் இண்டெர்வலுக்கு  முன் வரும் அந்த 20 நிமிடங்கள் அருமை 
எந்த கட் ஷாட் இல்லாமல் " கதவை திறந்து வந்து சமந்தாவை  கட்டி பிடித்து சுற்றுவதில் இருந்து சண்டை போட்டு பிரிவது வரை" அவ்ளோ அருமையான படப்பிடிப்பு.
**********************************************************************************************************
 சமந்தா 
      
 உதட்டில் கை வைத்து கொண்டு அவரின் பாவங்கள் அது வெட்கமா... சிரிப்பா ... கோபமா,,,, ஆச்சர்யமா என கலந்து கட்டி அடிக்கிறார்.
சமந்தா அவ்ளோ அழகு 
சமந்தாவின் குரல் ( அவருடையதா இல்லை பின்னணியா ) அது இன்னும் மெருகு ஏற்றுகிறது அந்த காதலுக்கு.
 ஜீவா சொல்வது போல "கார்  ஸ்டார்ட் ஆகுற மாதிரி  சிரிப்பா அவ "
உண்மை தான் அது,,,,
ஆனாலும் அவர் சிணுங்கும் போதும், சிரிக்கும் போதும் , சினம் கொள்ளும் போதும், தன்னையே திட்டி கொண்டு கதறும் போதும் அந்த அவரின் காந்த குரல் அந்த காட்சிக்கு மேலும் வலு சேர்க்கிறது .
சில உதாரணங்கள் 
" நான் ஒரு physiology ஸ்டுடென்ட் ம்ம்ம் எனக்கு என்ன பிடிக்கும்...ம்ம்ம்  எனக்கு நீ மட்டும் போதும் டா ... " என்றும் கூறும் போது ...
முத முறையா  டிராபிக் சிக்னலில் நிக்குறது ரொம்ப பிடிச்சு இருக்கு. என்று கூறும் போதும்...
" அங்க நெறய பொண்ணுங்க இருகாங்க,,, நமக்கு நடுல உக்கார வச்சுபோமான்னு ஜீவா கேட்கையில்..சிரித்து கொண்டே ஜீவாவை மிகவும் நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டு தனக்கு பக்கத்தில் இடம் காட்டும்  போதும் ,,,,,,,
"சொதப்பிட்டேன்" என்று அக்காவின் மடியில்  படுத்து கதறும் போதும்  அவரின் காதல் நம் கண்களையும் நீர்க்க செய்கிறது. அவர் மீதும் கோபம் கூட வருகிறது.
" நம்ம ரெண்டு பேருக்குமே ஒரே நண்பர்கள் என ஜீவா சொல்லும் பொது " அவங்க உன்ன பத்தி பேசுறதே இல்ல " என சொல்கையில் அவரின் தவிப்பும் ஏக்கமும் நம்மிடமும் தொற்றி "கொல்கிறது ".
***********************************************************************************************************
ஜீவா 
     
அவரின் மிக ஆழமான படைப்புகளில் மற்றும் ஒரு மைல்கல்.
பள்ளி கட்சிகளில் சற்று பொருந்தாமல் தான்  போகிறார்.
ஆனால் அவர் கண்களில் காதல் எப்போதுமே சுருதி குறையாமல் தாளம் போடுகிறது.
சமந்தாவை நீ தான்  என் பொன் வசந்தம் என ரசிக்கும் இடங்களாகட்டும்... அவர் தன்னை புரிந்து கொள்ளவில்லையே  என தவிக்கும் இடத்திலும் ஒரு நல்ல காதலனின்  ஏக்கத்தை கண் முன் நிறுத்துகிறார்.
இறுதி காட்சியில்  சமந்தாவின் தந்தையிடம் தன இத்துணை ஆண்டு காதலை வெளிபடுதுகையில் நாமும் அவருக்கு துணையாய் தலை ஆட்டுகிறோம்.
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
ஒரு சில கேள்விகள்.
ஒரு பெண் பார்க்கும் படலம் தோற்று போகிறது.
சரி அதற்காக இவ்ளோ சோகமாகவா ஒரு வீட்டில் இருப்பார்கள்?
இந்த ஒரு நிகழ்வு ஜீவாவின் மனதை மாற்றட்டும் அதற்காக,,,, அவரை தவிர எதை பற்ற்யுமே சிந்திக்காத சமந்தாவை விட்டு விலகி போதல் நியாயம் இல்லையே..
அவரிடம் பேசி புரிய வைக்க எந்த முயற்சியுமே செய்யாமல். சமந்தாவின் கோபத்தை மட்டும் குற்றம் சொல்வது நியாயம் இல்லையே..
இறுதி காட்சிகளில் இத்துணை சண்டைக்கும் தான் தான் காரணம் என சமந்தாவை தன வாயாலேயே ஒத்து கொள்ள செய்வது எப்படி சரி ஆகும் ?
அவரை விட்டு IIm  கோழிகோடு செல்வதை இவ்ளோ வெறுப்பாக சமந்தாவிடம் மொட்டை மாடியில் சொல்ல வேண்டியது இல்லையே...
அவருக்கு possessiveness அதிகம் என தெரிந்தும்.... 
சமந்தாவை பிரிந்த அந்த நாலு வருடங்களில்... MBA முடித்து வேலைக்கு சென்று.. அண்ணன் திருமணம் முடித்து,,, அப்பா அம்மா ஆஸ்திரேலியா செல்வது... இது அனைத்தும் சாத்தியமா என்ன?
ஜீவா எங்கே வேலை பாக்கிறார்..
சந்தானமும் அவரின் காதலியும்  ஜீவாவை எங்கு சந்திகிறார்கள் 
ரயில் மினி பஸ் மற்றும் பல வாகனங்கள் பிடித்து ஜீவா எங்கு இருந்து மணப்பாடு வருகிறார்?
இப்படி சிற்சில கேள்விகள்........
கிளைமாக்ஸ் 
செறிவான மற்றும் நெகிழ்வான படைப்பு தான் .
ஆனாலும் ஒரு சிறு வருத்தம்.
நித்யா வருனிடம் கிரிக்கெட் தவிர்த்து இன்னொன்றும் கற்று கொண்டார்.
அதை முதலிலேயே செய்து இருந்தால் இவ்ளோ சண்டையே வந்து இருக்காது.
உண்மைதான்.
ஆனால் எங்களுக்காவது அதை முழுதாய் காட்டி இருக்கலாமே...
ஆச்சர்ய குறி  இல்லாத  கவிதையா ?
முத்தம் இல்லாத காதலா ?
8 வயசுல அது தப்பு தான் ..
ஸ்கூல் படிக்கும் போதும் கூட அது தப்பு தான் ...
ஆனால் காலேஜ் படிக்கும் போது  தப்பே  அது தப்பே இல்லையே சார் ...
அப்ப கூடவா ஸ்க்ரீன் போடணும்...
ஆனாலும் நீங்க ரொம்ப அநியாயம் பண்ணிடீங்க கெளதம் சார்..

இருந்தாலும் யார் தொல்லையும் இல்லாம ஆழ்மனசுகுள்ள ஒரு சுற்றுலா போக உதவனதுக்கு நன்றி கெளதம் சார்.
தொடர்ந்து இது போன்ற படைப்புகள எதிர் பார்க்கிறேன் .

அன்பு வாழ்த்துகளுடன் 
பிரசன்னா 

Monday, April 16, 2012

ஏன் நீ ?



உன்னை மறக்க  என்னும் போது......
நீ காட்டிய காதல கண்ணை மறைக்கிறது,,,,

உன்னை  நேசிக்க நினைத்தால்....
உன் புறகணிப்பு படுத்துகிறது 

என்னடி செய்வேன் நான் ?