கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கக் கோரும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நிச்சயம் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்க கூடாது . நோய்க் கொடுமை நிச்சயம் துயரமானது தான்.
வலிகளை சுமக்கும் நோயாளியாகட்டும் அவரின் ரத்த உறவுகள் படும் துயரமாகட்டும் எல்லாவற்றிற்கும் மேலாக நோயின் காரணமாக ஏற்படும் பொருளாதாரத் துயரமாகட்டும் அனைத்துமே நிச்சயம் சகித்துக் கொள்ள இயலாதது தான்.ஆனால் அதற்க்கான தீர்வு கருணைக் கொலை அல்ல.
நூறு சதவிகிதம் நம்பகத்தன்மை வாய்ந்த மருத்தவ முறைகளுக்கு இன்னும் நாம் ஆட்ப்படவில்லை. ஒரு சில போலி மருத்துவர்கள், போலி மருந்துகள், காரணமே இல்லாத அதிக மருத்துவ செலவு, கவனக்குறைவால் ஏற்படும் உயிர் இழப்புகள் என இப்படி மருத்துவ துறையின் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டுகள் அதிகம்.
இவை முழுமையாக களையப் படாமல் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கப் பட்டால் நடந்தது நூறு சதவிகிதம் கருணைக் கொலை தான் என்பதற்க்கான நம்பிக்கையினை யாரால் தந்து விட முடியும்.?
வெளிப்படையான நூறு சதவிகித நேர்மையான நிர்வாகம் சாத்தியப் படாத நம் தேசத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்காமல் இருப்பதே சிறந்தது.
நோய் தீவிரமடைவதற்க்கும் ,சரியான நேரத்தில் தேவையான சிகிச்சை கிடைக்காமல் இருப்பதற்கும் வேறு சில காரணிகள் இருக்கின்றன.
நோயில் விழும் ஒருவரின் பின்னால் தவறான உணவு பழக்கம், கலப்படம் நிறைந்த உணவுகள், போதை பழக்கம், சக மனிதனை நேசிக்காமல் சுரண்ட மட்டுமே கற்றுக் கொடுக்கும் கல்விமுறை, நேசம் தொலைந்து போன குடும்பங்கள், சிதைந்து போன கூட்டுக் குடும்ப அமைப்பு இப்படி புறக் காரணிகள் நிறைய உண்டு.
இதை சரி செய்து விட்டாலே மகிழ்ச்சியான தலைமுறைகளை உருவாக்கி விடலாம். அதன் பின்னர் நோய் என்றால் என்னவென்ற தெரியாமல் கூட போய் விடலாம்.
நூறு வயது வரையும் கூட உடல் உழைப்பு நிறைந்த வயல் வெளிகளில் மிக ஆரோக்யமாக வாழ்ந்து மறைந்த பெருமை நம் தாத்தாக்களுக்கு உண்டு. நம்மாளும் அது முடியும்.
அனைத்திற்கும் மேலாக குற்றவாளிகளை தவிர்த்து ஏனையோர் இந்த பூமியில் வாழ வேண்டிய நாட்களை நிர்ணயம் செய்ய நாம் ஒன்றும் கடவுள் அல்ல. ( கொடும் குற்றவாளிகளுக்கு கூட கருணை மனு என்ற விலக்கு உண்டு)
காலம் வந்ததும் இலைகள் தானே உதிர்ந்து பூமியை முத்தமிடும். அதுவரை நோயால் துன்பப் படும் நபர்களுக்கு கோப்பை நிறைய அன்பை பருகக் கொடுக்கலாமே?

No comments:
Post a Comment